தந்தையின் மறைவுக்கு பின், உருக்கமான பதிவுடன் சண்முக பாண்டியன்: ஆறுதல் கூறும் தொண்டர்கள்.!



Actor Shanmuga Pandian Sad Post 

 

மறைந்த தேமுதிக நிறுவனர் மற்றும் மூத்த நடிகர் விஜயகாந்தின் நினைவு இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. அதேபோல அவரின் குடும்பத்திலும் அது பேரிழப்பாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் விஜயகாந்தின் மகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உருக்கமான நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், "உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். 

நீங்கள் அளித்த ஆதரவு அத்தனையும் எனது அப்பா உங்களுக்காக எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த கடுமையான நேரத்திலும் உங்களுடைய ஆறுதல் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்ததை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.