பருத்தி வீரன் பட நடிகர் செவ்வாழை ராஜ் காலமானார்... திரையுலகினர் இரங்கல்!!Actor sevalai Raj died today

தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பருத்திவீரன். இப்படத்தில் ப்ரியாமணி, கஞ்சா கருப்பு,சரவணன், சுஜாதா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் செவ்வாழை ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் பல படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் 70 வயதாகும் செவ்வாழை ராஜ் சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு செவ்வாழைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.