சினிமா

35 வயதில் திடீரென மாரடைப்பால் இறந்த நடிகர் சேது 17 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தார்னு பாருங்க.! நண்பர் வெளியிட்ட அரிய புகைப்படம்.!

Summary:

Actor sethu 17 years back photo goes viral

தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய மரணங்களில் ஓன்று நடிகர் மற்றும் டாக்டர் சேதுவின் மரணம். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் நடிகர் சேதுராமன்(35).

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததை அடுத்து வாலிபராஜா என்ற தமிழ் படத்திலும், ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தார். அதன்பிறகு வாய்ப்புகள் குறைவே மீண்டும் தனது டாக்டர் பணிக்கே திரும்பினார் நடிகர் சேது.

இந்நிலையில்தான் கடந்த மார்ச் மாதத்தில் திடீர் மாரடைப்பினால் மரணமடைந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் தனது நண்பனின் மரணம் குறித்து, மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்த டாக்டர் அஸ்வின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சேதுவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் சேது மிகவும் சிறிய பையனாக தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

View this post on Instagram

2003 !

A post shared by Ashwin Vijay (@drashwinvijay) on


Advertisement