'கபடி நம்ம பாரம்பரிய விளையாட்டு' வைரலாகும் சசிகுமாரின் கென்னடி கிளப் டீசர்.!

'கபடி நம்ம பாரம்பரிய விளையாட்டு' வைரலாகும் சசிகுமாரின் கென்னடி கிளப் டீசர்.!


actor sasikumar - director susenthiran - vairal khennadi clup teaser

தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர் என பன்முகம் திறன் கொண்டவர் சசிகுமார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மையமாக கொண்டு உருவாகும் கென்னடி கிளப் என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து அவருடைய நண்பரான சமுத்திரக்கனி, இயக்குனர் பாரதிராஜா, சூரி, காயத்திரி உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

கபடி போட்டியில் பெண்கள் அணியை மையமாக கொண்டு தயாராகும் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.