கிறிஸ்துமஸ் வாழ்த்துடன் புதிய லுக்கில் சந்தானம்; வைரலாகும் போட்டோ.!

கிறிஸ்துமஸ் வாழ்த்துடன் புதிய லுக்கில் சந்தானம்; வைரலாகும் போட்டோ.!


actor-santhanam-christmas-celebration-photo-gone-viral

தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் பலரையும் இன்றுவரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. 

காமெடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் அளவு உச்சத்தில் இருந்த சந்தானம், காமெடி சார்ந்த கதைகளில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உலகமே ஈடுபட்டு இருக்கிறது. 

இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளபக்கத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற சட்டையில் அவர் கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.