Tiger 3 on Cinemas:திரையரங்கில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்; கண்டித்த சல்மான் கான்.. குவியும் பாராட்டுக்கள்.!

Tiger 3 on Cinemas:திரையரங்கில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்; கண்டித்த சல்மான் கான்.. குவியும் பாராட்டுக்கள்.!



Actor Salman Khan Tiger 3 Movie Theatre Firecrackers Issue Salman Condemn to Fans 

 

மணீஷ் வர்மா இயக்கத்தில், சல்மான் கான், கத்ரீனா கைப், ஷாருக்கான் உட்பட பலர் நடித்து, நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டைகர் 3. 

ரூ.300 கோடி செலவில் உருவாகியுள்ள ஆக்சன்-த்ரில்லர் காட்சிகள் கொண்ட டைகர் 3 திரைப்படம், முதல்நாளில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திரையரங்கில், டைகர் திரைப்படத்தின் போது சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் வானவெடியை திரையரங்கினுள் வெடித்தனர். 

இதனால் படம்பார்க்க வந்த பலரும் பதறிப்போன நிலையில், தங்களின் இருக்கையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ரசிகர்களின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சல்மான் கான், "தங்களின் உயிரையும், பிறரின் உயிரையும் பணயம் வைக்காமல் படம் பாருங்கள், அதனை ரசியுங்கள். இதுபோன்ற செயல்கள் ஆபத்தானது" என தெரிவித்துள்ளார். 

தனது ரசிகர்களின் அனைத்து செயல்களையும் ஆதரிக்காமல், தவறு செய்யும்போது சல்மான் கான் கண்டித்து வரவேற்பை பெற்று வருகிறது.