அச்சோ.. இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு! பாரதி கண்ணம்மா ரோஹித் வெளியிட்ட ஷூட்டிங் வீடியோவால் செம ஷாக்கான ரசிகர்கள்!!actor-sabari-shares-bharathi-kannamma-shootingspot-vide

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் வில்லியான வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வார எபிசோடுகளில், வெண்பா பாரதியை ஏமாற்றி சதிசெய்து கோவிலில் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். அப்பொழுது அங்கு விரைந்த கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் பாரதியை வெளுத்து வாங்கி திருமணத்தை நிறுத்தினர்.

இந்நிலையில் பாரதி, வெண்பா வயிற்றில் வரும் குழந்தைக்காகதான் நான் அவரை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டதாக கூறுகிறார். இதனை கேட்டு கடுப்பான கண்ணம்மா அவரை விளாசுகிறார். மேலும் ஹேமாவும் பாரதி மீது கோபப்பட்டு கண்ணம்மாவுடனே செல்கிறார். இதற்கிடையில் ரோஹித் அது தனது குழந்தை. வெண்பாவிற்கும் அது நன்கு தெரியும் என கூறியநிலையில் அதிர்ச்சியடைந்த பாரதி வெண்பாவை அறைகிறார். தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் விட்டு சென்றநிலையில் பாரதி தனியாக நிற்கதியாய் நிற்கிறார். 

இந்நிலையில் அடுத்து என்ன நடக்கபோகிறது என்ற ஆவலுடன் பாரதி கண்ணம்மா தொடர் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், பெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் நடைபெறுவது போன்ற வீடியோவை ரோஹித் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சபரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.