தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நடிகர் ரியோ ராஜ்கு வாழ்த்து கூறும் ரசிகர்கள்! விசேஷம் என்னனு தெரியுமா!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர் தான் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரிலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டாப் 5ல் வந்தார். இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.