
Actor ravi mariya joind in admk party
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி காட்சிகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அணைத்து கட்சிகளும் பரபரப்பாக உள்ளது. ஏறக்குறைய தமிழகத்தின் அணைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி காட்சிகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்துவிட்டன. கேப்டன் மட்டும் இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தேர்தல் பிரச்சாரங்கள் இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரவி மரியா இன்று முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் அதிமுக கட்சியில் சேர்ந்துள்ளார்.
தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹார ஹர மஹாதேவகி முதல் சமீபத்தில் வெளிவந்த சார்லி சாப்ளின் 2 படம் உட்பட பல படங்களில் அவரின் காமெடி நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர்தான் ரவி மரியா.
இதுபற்றி பேசியுள்ள நடிகர் ரவிமரியா தற்போதுள்ள அரசு மக்களுக்கு நல்ல பணிகளை செய்து வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறார்கள். அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் அதிமுகவில் சேர்ந்தேன். இந்த கட்சிக்காக வருகிற பார்லிமென்ட் மற்றும், சட்டசபை தேர்தல்களில் பிரச்சாரம் செய்வேன்" என்றும் தெரிவித்துள்ளார் ரவிமரியா.
Advertisement
Advertisement