தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
திடீரென தனி விமானத்தில் ஹைதராபாத் பறந்த நடிகர் ரஜினி! அதுவும் ஏன் தெரியுமா? செம ஹேப்பியான ரசிகர்கள்!!
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி சென்னையிலிருந்து தனது தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினி தற்போது தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.
இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. அப்பொழுது அங்கு பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் சென்று சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
#Annaatthe pic.twitter.com/XeclyWK72G
— Rajini Soldiers (@RajiniSoldiers) April 8, 2021
இதனால் சில மாதங்களாக அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மூன்று வாரங்கள் நடைபெறவுள்ளதாகவும், மேலும் அதற்காக நடிகர் ரஜினி தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினி விமான நிலையத்தில் இருந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.