சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல முன்னணிநடிகர்! அவரது தற்போதைய நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Summary:

actor rajasekar struggled in accident

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் ராஜசேகர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இதுதாண்டா போலீஸ், மீசைக்காரன்,  ஆம்பள போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் ராஜசேகர் இன்று அதிகாலை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருந்து காரில் ஹைதராபாத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கோல்கொண்டா என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் நடிகர் ராஜசேகருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கார் விபத்துக்குள்ளானதும் அப்பகுதியில் உள்ளவர்கள் ராஜசேகரை காரில் இருந்து மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அவரது மனைவிக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் நடிகர்  ராஜசேகரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதை தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement