விஜய்யின் தவெக கட்சியில் இணைய தயார்.! பிரபல நடிகர் அறிவிப்பு.! தளபதி அழைப்பாரா??actor-radharavi-ready-to-join-in-vijay-party

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர்  நடிகர் ராதாரவி. 50 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் அவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். அவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கடைசி தோட்டா.

நடிகர் ராதாரவியின் கடைசி தோட்டா 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் நவீன் குமார் எழுதி இயக்கியுள்ளார். மேலும் படத்தை ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர் சுவாமிநாதன் ராஜேஷ் தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். இந்த படத்தில் வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: என்னங்கையா இது... அந்த ஆசைக்கு விஜய்யை பயன்படுத்துகிறார் த்ரிஷா.!! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா.!!

Radharavi

விஜய் கட்சியில் இணைய தயார் 

அதில் பேசிய நடிகர் ராதாரவி, நான் சினிமாவுலகில் நுழைந்து 50 ஆண்டுகளை கடந்து விட்டேன். மேலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவனது இறப்பு வீடியோவை வெளியிட்டும் பணம் சம்பாதிக்கின்றனர். மேலும் ஒரு நடிகன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் மக்கள் மத்தியில் பேசப்படும். நான் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்கக்கூடியதுதான். அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாக அவருடைய கட்சியில் இணைவேன் என கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: "ஒரே அப்பார்ட்மெண்டில் விஜய் & த்ரிஷா."? உண்மையான காரணம் இதுதான்.!!