சினிமா

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன பிரபல நடிகர் பிரித்விராஜ்! புகைப்படம்!

Summary:

Actor prithviraj current photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ப்ருத்விராஜ். 2005 ஆம் ஆண்டு வெளியான கானா கண்டேன் என்ற திரைப்படம் மூல தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நடிகர்  ப்ருத்விராஜ். அதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் நடிகராக மாறினார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகர்  ப்ருத்விராஜ் முதலில் அறிமுகமானது மலையாளம் சினிமாவில்தான். தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

பிரபல தமிழ் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்  ப்ருத்விராஜ். அதன்பின்னர் இவரை எந்த படங்களிலும் பெரிதாக காண முடியவில்லை.

இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் ஆடுஜிவித்தம் படத்தில் இருந்து அவரது ஒரு கெட்டப் கசிந்துள்ளது. அந்த போட்டோவில் சுத்தமாக அது ப்ருத்வி தானா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் உள்ளார்.


Advertisement