அட.. மாஸ்டர் படத்தில் இவரும் இருக்காரா! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்!

அட.. மாஸ்டர் படத்தில் இவரும் இருக்காரா! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்!


actor premkumar act in master movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு , மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. 

master

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரேம்குமார் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனது டப்பிங் வேலையை முடித்து விட்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் நடிச்சுருக்கீங்களா சூப்பர் என பதிவிட்டுள்ளனர்.