புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நடிகர் பொன்னம்பலத்தின் இரண்டு கிட்னியும் செயலிழந்தது..! சிகிச்சையில் இருக்கும் அவருக்கு ரஜினிகாந்த் உதவி.!
இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க வில்லன் நடிகர்களில் ஒருவர் பொன்னம்பலம். 90 களில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சினிமா, நடிப்பு இவற்றையும் தாண்டி, அரசியலிலும் அதிகம் ஈடுபாடுகொண்டவர் நடிகர் பொன்னம்பலம். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ ஒன்றையும் பொன்னம்பலம் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அவ்வப்போது அவருக்கு போன் செய்து உடல்நலம் குறித்து விசாரித்துவருவதாகவும், பொன்னம்பலதின் குழந்தைகளின் பட்டிப்புச்செலவை கமல் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பொன்னம்பலதிற்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். மருத்துவச் செலவு முழுமையாக தான் கவனித்துக் கொள்வதாகவும், மருத்துவச்செலவு குறித்து நீங்கள் கவலைபட வேண்டாம், நீங்கள் நலமுடன் இருங்கள் என்று கூறிய ரஜினிகாந்த், ஊரடங்கு முடிந்தபிறகு நேரில் வந்து பார்க்கிறேன் என்றும் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.
#Ponnambalam who is a villain cum character actor had been admitted at VHS Hospital for treatment. @ikamalhaasan has been in touch to update himself about the status of health. He has also undertaken to meet the cost of children' s education. @idiamondbabu pic.twitter.com/ue5iBqvR2X
— r.s.prakash (@rs_prakash3) July 9, 2020