380 மணிநேரத்தில் 1 கோடி பின்தொடர்பாளர்களை பெற்ற பவன் கல்யாண்; தெலுங்கு திரையுலகில் புதிய சாதனை..!Actor Pawan Kalyan Instagram Followers 

 

கடந்த காலங்களில் திரைத்துறையினரை வைத்து விளம்பரப்படுத்தப்பட்ட பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் செயலிகள், இன்றளவில் தவிர்க்க முடியாத சமூக வலைத்தளங்களில் ஒன்றாகிவிட்டது. 

இதில் ரசிகர்கள் தங்களுக்குள் எங்களது தலைவரின் வீடியோ பதிவிட்ட நேரத்தில் எப்படி வைரலானது, அவருக்கு இவ்வுளவு பின்தொடர்பாளர் இருக்கின்றனர் என சண்டையிட்டு வருகின்றனர். இவை தொழில்நுட்ப ரீதியாக சாதனையிலும் பதிவு செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் நம்மிடையே அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், சில நடிகர்கள் தற்போது தான் அதனை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் & அரசியல்வாதி பவன் கல்யாண் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வருகை தந்தார். 

cinema

அவர் அதே வேகத்தில் சாதனையும் செய்துள்ளார். அதாவது நடிகரை பவன் கல்யாண் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய 380 நிமிடங்களில் 1 கோடி பயனர்களை பின்தொடர்பாளராக கொண்டுள்ளார். இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

ஏனெனில் பிரபாஸ் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய 23 நாட்களிலும், ராமச்சரன் 74 நாட்களிலும், மகேஷ் பாபு 89 நாட்களிலும், அல்லு அர்ஜுன் 184 நாட்களிலும், என்.டி.ஆர் 416 நாட்களிலும் 1 கோடி பயனர்களை பெற்றுள்ளனர்.