சினிமா

தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்! முதல் மனைவி இவர்தானா? ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

மலையாள சினிமாவில் ஏறக்குறைய 260 படத்திற்கு மேல் நடித்து முன்னணி நடிகராக இருக்க கூறியவர் நட

மலையாள சினிமாவில் ஏறக்குறைய 260 படத்திற்கும் மேல் நடித்து முன்னணி நடிகராக இருக்க கூறியவர் நடிகர் முகேஷ். இவர் தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். மேலும் முகேஷ் தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-வாக உள்ளார். மேலும் அவ்வபோது இவர் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார்.

நடிகர் முகேஷ்க்கு பிரபல நடிகை சரிதாவுடன் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் அப்பொழுது நடிகை சரிதா நடிகர் முகேஷ் குடிக்கு அடிமையானவர் எனவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து முகேஷ் 2013-ல் மெத்தில் தேவிகா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மெத்தில் தேவிகா தற்போது 64 வயதாகும் நடிகர் முகேஷை விவாகரத்து செய்ய முடிவு செய்து குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முகேஷ் அன்பு காட்டுவதில் சிறந்தவர். நல்ல மனிதர். ஆனால் நல்ல கணவர் கிடையாது. 8 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் அவரைப் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.


Advertisement