நடிகர் தனுஷின் கர்ணன் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல டாப் ஹீரோ! யார் தெரியுமா??

நடிகர் தனுஷின் கர்ணன் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல டாப் ஹீரோ! யார் தெரியுமா??


Actor mohanlal got release  rights of karnan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கர்ணன்.  இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். மேலும் கர்ணன் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில்  படத்தின் ப்ரமோஷனுக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் இப்படத்தின் கேரளா திரையரங்கு உரிமையை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தை கேரளாவில் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது கர்ணன் ரிலீஸ் உரிமையை பெற்ற நடிகர் மோகன்லாலுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி கூறியுள்ளார்.