சினிமா

நடிகர் விஜய்யின் படத்தில் நடிக்க மறுத்த பிரபல மூத்த முன்னணி நடிகர்! அவர் கூறிய காரணத்தை பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Actor mike mohan rejected to act in vijay movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, தனக்கென  பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் ரிலீசாகும் நாளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் விஜய் தளபதி65 படத்தில் நடிப்பதற்கான அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே தளபதி விஜய் படத்தில் நடிக்க அனைத்து நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருவர்.  இந்நிலையில் 80களில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகன். அவரிடம் விஜய்க்கு தந்தையாக நடிக்க கேட்ட பொழுது, எனக்கு இப்பொழுது என்ன வயசு ஆயிருச்சுன்னு அவருக்கு அப்பாவா நடிக்க கேட்கிறீங்க என கோபமாக கேட்டதாகவும்,  நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement