விஜய் டிவியில் முடிவுக்கு வந்த பிரபல நெடுந்தொடர்.! 2ஆம் பாகம் ஆரம்பமாகுமா?? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!!

விஜய் டிவியில் முடிவுக்கு வந்த பிரபல நெடுந்தொடர்.! 2ஆம் பாகம் ஆரம்பமாகுமா?? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!!



actor-mahesh-update-about-pandian-stores-2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வாறு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் ரீச்சான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பம், அண்ணன் தம்பிகளின் பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தொடரில் கண்ணனாக நடித்த சரவணன் விக்ரம் தற்போது பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து படப்பிடிப்பின் இறுதிநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய மற்றும் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

pandian stores

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஆரம்பமாகுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் தொடரில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த மகேஷ் பேட்டி ஒன்றில், ஐந்து ஆண்டுகளாக தொடரில் வில்லன்களே கிடையாது. நான்தான் பாண்டியன் ஸ்டோர் தொடரின் முதல் வில்லன். இதில் எனது நடிப்பு திறமையை பயன்படுத்திக் கொண்டேன்.

வில்லனாக என்னை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பயந்தேன் ஆனால் அவர்களுக்கு பிடித்துவிட்டது. மேலும் கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஆரம்பமாகும். அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.