அட.. சூப்பராச்சே.! தனுஷின் சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் மாதவன்.! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!actor-madhavan-next-movie-going-to-direct-by-javahar-mi

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற யாரடி நீ மோகினி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் மித்ரன் ஜவஹர். அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பிலேயே குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அந்த படங்களும் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் அண்மையில் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் அடுத்ததாக நடிகர் மாதவன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்த படத்தைத் மிக திறமையான மற்றும் ரசிகர்களின் விருப்பமான நடிகர் மாதவன் நடிப்பில் இயக்கவுள்ளேன். மேலும் பாராட்டுக்குரிய மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதனை தயாரிக்கிறது என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.