நடுராத்திரி என்னைய வச்சு செஞ்சியே உன்னை மன்னிக்கவே மாட்டேன் - நடிகர் கார்த்திக் கொந்தளிப்பு..! actor karthik tweet about sandy

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெனட் தயாரித்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் சூரி, ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாஸ் போன்ற பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆகஸ்ட்-12ஆம் தேதி வெளியாகிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

viruman movie

இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப்பெற்ற நிலையில், வானம் கிடுகிடுங்க என்ற பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக சாண்டி பணியாற்றி இருந்தார். 

இப்பாடலின் ஒரு காட்சியில் கார்த்தியை சாண்டி மாஸ்டர் சம்மர் சால்ட் பல்டி அடிக்க வைத்திருப்பார். அதுவும் அதிகாலை 2 மணியிலிருந்து 3 மணிக்கு இந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது. 

viruman movie

இதனை இசை வெளியீட்டு விழாவின் போது கார்த்திக் கூறியிருந்த நிலையில், தற்போது தனது twitter பக்கத்தில் "நடுராத்திரி 3 மணிக்கெல்லாம் சம்மர் சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். உங்களை மன்னிக்கவே மாட்டேன். இனி ஊருக்குள்ள நம்ம பாட்டு தான் கண்டிப்பா இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.