16 வயது குறைந்த இளம்நடிகையை திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலத்தின் கணவர்! வைரலாகும் ஜோடியின் புகைப்படங்கள்!!actor-karthik-second-marriage-photo-viral

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்ந்து வருபவர் சுசித்ரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியவர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவரது கணவர் நடிகர் கார்த்திக். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சுசித்ராவை கார்த்திக் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. 

Actor Karthik

இந்த நிலையில் அவர் தற்போது மேயாத மான், தேவ் போன்ற படங்களின் மூலம் அறியப்பட்ட நடிகை  அம்ருதா சீனிவாசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் நடிகர் கார்த்திகை விட 16 வயது குறைந்தவராம். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Karthik