சினிமா

அண்ணன் சூர்யாவுடன், நடிகர் கார்த்தி எடுத்த முதல் செல்பி! எப்படி இருக்காங்க பார்த்தீர்களா! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவ

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கார்த்தி தற்போது சர்தார் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துக் கூறி அவரது தம்பியான நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து ஒன்றாக எடுத்த முதல் செல்பியாம்.2019ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருவரும் இணைந்து அந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement