சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை! அவரது தம்பி நடிகர் கார்த்தி வெளியிட்ட புதிய தகவல்!!

Summary:

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்கள் இந்த க

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்கள் இந்த கொடூர தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் இத்தகைய கொரோனா வைரஸ்க்கு சாமானியர்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஆளாகினர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சமீபத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாகவும், வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை, பாதுகாப்பும் கவனமும் அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்., இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

 இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணா வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சில நாட்கள் வீட்டு தனிமையில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என உருக்கமுடன் தெரிவித்திருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 


Advertisement