கார்த்திக்கின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்; புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு.!!



Actor Karthi Starring New Movie Titled As Meiyazhagan  

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கார்த்திக், கடந்த 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, சகுனி, கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, பொன்னியின் செல்வன் உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

மெய்யழகன் (Meiyazhagan) திரைப்படம்

இன்று நடிகர் கார்த்திக்கின் பிறந்தநாள் ஆகும். அவர் தனது 46 வயதில் அடியெடுத்து வருகிறார். தற்போது 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தி நடிகர் கார்த்திக் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்திக்குடன் அரவிந்த் ஸ்வாமியும் நடிக்கவுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில், மகேந்திர ஜெயராஜு ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் எடிட்டிங்கில் படம் தயாராகி வருகிறது. 

இதையும் படிங்க: அனல்பறக்கும் வைப்.. சூரியின் கருடன் பட 'ஒத்தப்பட வெறியாட்டம்' பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!

ஒருகாலத்தில் முன்னணி நடிகராக வலம்வந்த அரவிந்த் சுவாமி, தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்திக்குடன் அவர் இணைந்து இருக்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போட்டோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.!