"என் அண்ணனுடன் சேர்ந்து நடிக்க ஆசை" மனம் திறந்த கார்த்தி..



Actor karthi like to act with his brother

80களின் நடிகரான சிவக்குமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் முக்கிய நடிகர்களாக உள்ளனர். 2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான "பருத்தி வீரன்" திரைப்படத்தில் அறிமுகமானார் கார்த்தி.

Karthi

முன்னதாக, தந்தையின் விருப்பப்படி அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த கார்த்தி, பின்னர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் இவரது சகோதரர் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

கார்த்தியும் அந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இருவரும் சகோதரர்களாக இருப்பினும், ஒரு படத்தில் கூட இதுவரை இணைந்து நடிக்காதது குறித்து கார்த்தி கூறியுள்ளார். 

Karthi

நானும், சூர்யாவும் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளோம். அதற்காக ஒரு நல்ல கதையினை தேடிக் கொண்டுள்ளோம். முதலில் நான் பயந்தேன். ஆனால் இப்போது இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கார்த்தி கூறியுள்ளார்.