இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
சில்க் ஸ்மிதாவுடன் நடித்தது குறித்து மனம் திறந்த நடிகர் கமல் ஹாசன்: சுவாரசியமான தகவல்..!
கடந்த 1979-ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்மிதா. தனது கதாபாத்திரத்தின் காரணமாக பின் நாட்களில் சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்பட்டார்.
பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கவர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பின் நாட்களில் பிரபலப்படுத்தப்பட்டார். பல நட்சத்திரங்களுடன் நடித்த சில்க் ஸ்மிதா, நடிகர் கமல்ஹாசனுடனும் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், "என்னுடன் சில்க் ஸ்மிதா கவர்ச்சியான நடன காட்சியில் நடித்தது இல்லை. அந்த காட்சி வணிகத்திற்காக இணைக்கப்பட்டது.
எந்த படத்திலும் எடுக்கப்படாத பாடல் ஒன்றை மிக குறைந்த செலவில் எங்கள் இருவரை பயன்படுத்தி இயக்குனர் படமாக்கினார். நடிகை ஸ்மிதாவுக்கு நடனமாட தெரியாது.
பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டரின் நடனத்தை பார்த்து அதற்கு ஏற்ப ஆடினார். அவர் விஷயங்களை கற்றுக் கொள்வதில் சிறந்தவர் என்றும் கூறலாம்.
நாகரிக உணர்வு அவருக்கு அதிகம். பேஷன் சார்ந்த பத்திரிகைகளையே அதிகம் படிப்பார். சமைக்கத் தெரியாத பட்சத்திலும் பாலு மகேந்திராவுக்காக சமைக்க விரும்பினார்" என கூறினார்.