அட.. சூப்பர்! தலைவரின் 170வது படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை.! யார்னு தெரியுமா?? பரவி வரும் தகவல்!!Actor kalyani priyatharshan may act in thalaivar 170 movie

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கிடையே, ரஜினி 170 படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலைவரின் 170வது படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டான் படத்தை இயக்கிய  இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

rajini

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில் அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது படத்தில் அரவிந்த் சாமி, வடிவேலு ஆகியோரை தொடர்ந்து தற்போது இளம்நடிகை கல்யாணி பிரியதர்ஷினியும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தின் பூஜை நாளை சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.