ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ஆத்தி.. இத்தனை கோடியா?.. வெளியானது நடிகர் ஜெயம்ரவியின் சொத்துமதிப்பு..! பகீர் தகவல்..!!
நடிகர் ஜெயம்ரவியிண் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் "ஜெயம்" திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் "ஜெயம் ரவி" என்று அறியப்பட்டு பிரபலமடைந்தார்.
இவர் நடித்த சில படங்கள் வெற்றியை கொடுக்காவிட்டாலும், பல படங்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக "பூமி" திரைப்படம் வெளியாகியது. ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அளிக்கவில்லை.
தொடர்ந்து ஜெயம்ரவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" பகுதி ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாகவே பல திரைபிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்களும் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம்ரவியின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதில் ஜெயம்ரவியின் சொத்து மதிப்பு ரூ.70 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் நடிகர்களின் சொத்து மதிப்பானது கோடிக்கணக்கில் இருக்கும் என்பது மற்றும் உண்மை.