ஊரடங்கு சமயத்தில் பிரபல நடிகர் திடீர் மரணம்..! தாய் இறந்து ஒரே வாரத்தில் மகனும் இறந்த பரிதாபம்.!

ஊரடங்கு சமயத்தில் பிரபல நடிகர் திடீர் மரணம்..! தாய் இறந்து ஒரே வாரத்தில் மகனும் இறந்த பரிதாபம்.!


actor-irfan-khan-passes-away-at-age-of-54

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இர்ஃபான் கான். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த இவர் Life of Pi , Slumdog Millionaire , Jurassic World உட்பட பல உலக புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இர்ஃபான் கான் 2018 ஆம் ஆண்டில் தனக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Irrfan Khan

இந்நிலையில், பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி தனது 54 வயதில் உயிர் இழந்துள்ளார்.

இதில் மேலும் சோகமாக விஷயம் என்னவென்றால் இவரது தாய் Saeeda Begum கடந்த சனிக்கிழமை வயது முதிர்வு காரணமாக தனது 95 வயதில் உயிர் இழந்தார். தாயின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் இருந்த இர்ஃபான் கான் வீடியோ கால் மூலம் தனது தாயின் இறுதி சடங்கை பார்த்தார்.

தாய் இறந்து ஒருவாரத்தில் அவரது மகன் உயிர் இழந்திருப்பது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.