புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்கப் போவது இந்த பிரபல நடிகரா! யார்னு தெரியுமா??
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் திரைப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார்.
ஆனால் இதற்கிடையில் இலங்கையில் ஈழப்படுகொலை நடத்திய அரசுக்கு ஆதரவாக பேசியவர் முரளிதரன் எனவும், அவரது வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனவும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார். மேலும் விஜய் சேதுபதி இல்லாமல் இப்படத்தை எடுக்க விருப்பமில்லை அதனை கைவிடுவதாகவும் முத்தையா முரளிதரன் அறிவித்ததாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது 800 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரிட்டனைச் சேர்ந்த தேவ் படேல் என்பவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஸ்லம்டாக் மில்லியனர், தி லாஸ்ட் ஏர்பென்டர், சாப்பி, ஹோட்டல் மும்பை, தி வெட்டிங் கெஸ்ட் உள்ளிட்ட பல பிரபல படங்களில் நடித்தவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.