அட.. நம்ம இமான் அண்ணாச்சியின் மகளை பார்த்தீருக்கீங்களா.! முக்கிய நாளில் அவரே பகிர்ந்த புகைப்படம்!! இதோ...

அட.. நம்ம இமான் அண்ணாச்சியின் மகளை பார்த்தீருக்கீங்களா.! முக்கிய நாளில் அவரே பகிர்ந்த புகைப்படம்!! இதோ...


Actor iman annachi daughter photo viral

தமிழ் நகைச்சுவை நடிகராகவும், பிரபல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்த பிரபல தொகுப்பாளராகவும் வலம் வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் தொகுத்து வழங்கிய சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இவரது எதார்த்தமான நெல்லை தமிழ் பேச்சு மக்களை கவர்ந்தது.

அண்ணாச்சி வெள்ளித்திரையிலும் சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சென்னை காதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி பதித்தார். அதனை தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, நையாண்டி, ஜில்லா, மெட்ராஸ், பூஜை, காக்கிச்சட்டை, புலி என பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

 இமான் அண்ணாச்சி அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வார்.அவ்வாறு அண்மையில் அவர் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.