பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்கிறாரா இந்த பிரபல சீரியல் நடிகர்! இவர் அந்த சர்ச்சையில் சிக்கியவராச்சே!!Actor eeswar going to participate in bigboss season5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்தனர். கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதாவது அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தொடர்ந்து பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

bigboss

தற்போது பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். சீரியல் நடிகரான இவர் சில சர்ச்சைகளில் சிக்கியவர். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெய்ஸ்ரீ தன் கணவருக்கு சக நடிகையுடன் தகாத உறவு இருப்பதாக குற்றம்சாட்டி அது பெரும் சர்ச்சையானது.