பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சினிமா

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதாநாயகன் சேதுராமன் மாரடைப்பால் உயிழந்தார்.

கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.  மருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சேதுராமன் சென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

நடிகர் சேதுராமனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நடிகர் சேதுராமன் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo