தமிழகம் சினிமா

தனுஷின் பாலிவுட் படம் தமிழில் ரீமேக் ஆகிறது; ஜூன் மாதம் வெளியாகும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Summary:

actor danush - bollywood movie - remack - pakkiri

வடசென்னை, மாரி 2 படங்களை தொடர்ந்து அடுத்ததாக அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடக்கி, வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ஆங்கில திரைப்படமான The Extraordinary Journey Of The Fakir’ என்ற படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இப்படத்தை தமிழ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு 'பக்கிரி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த பாலிவுட் படம் தமிழில் ரீமேக் செய்யப் படுவதால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு முதலில் ‘வாழ்க்கையை தேடி நானும் போறேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டு ‘பக்கிரி’ என்று வைக்கப்பட்டுள்ளது.


Advertisement