மச்சான் இறந்த சோகமே மறையல.. நடிகர் பாலசரவணன் வீட்டில் நேர்ந்த மற்றொரு துயரம்! நிலைகுலைந்த குடும்பத்தார்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலசரவணன். அதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் குட்டிப்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் திருடன் போலீஸ், டார்லிங், ஒரு நாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இவரது தந்தை எஸ்.ஏ ரங்கநாதன். இவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன், கொரோனா தொற்று காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். #actorbalasaravanan ‘s father #SARanganathan passed away today in madurai, due to #Covid19. #RIPSARanganathan pic.twitter.com/IKsygDWJB3
— NadigarSangam PrNews (@NadigarsangamP) June 11, 2021
கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாலசரவணனின் தங்கையின் 32 வயதேயான கணவர் உயிரிழந்தார். அந்த சோகம் மறைவதற்கு முன்பு தற்போது அடுத்ததாக பாலசரவணனின் தந்தை உயிரிழந்துள்ளார். இது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.