நடிகர் அர்ஜுனின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம்.. கலங்கிப்போன அர்ஜுன்..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

நடிகர் அர்ஜுனின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம்.. கலங்கிப்போன அர்ஜுன்..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!


actor arjun mother death

பிரபல கோலிவுட் நடிகர் அர்ஜுனின் தாயார் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் அர்ஜுன். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். இவரது நடிப்பில் வெளிவந்த 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவரது நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் மற்றும் முதல்வன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அர்ஜுன் நிறைய ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பதால், அவருக்கு "ஆக்சன் கிங்" என்று ரசிகர்களால் சிறப்பு பெயர் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் அர்ஜுனனின் தாய் தேவம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது அவருக்கு 85 வயதாகும் நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், அவரது இறப்பு குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.