ஒரு ஏழை குடும்பத்தையே தத்தெடுத்த பிரபல நடிகர்!. குவிந்துவரும் பாராட்டுகள்!.

ஒரு ஏழை குடும்பத்தையே தத்தெடுத்த பிரபல நடிகர்!. குவிந்துவரும் பாராட்டுகள்!.



actor and directoe SJ surya helping to poor family

நடிகர் விஷால் சமூக பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற முயற்சியினை செய்துவருகிறார். இந்த முயற்சியில் அடிமட்டத்தில் கஷ்டப்படும் ஏழை மக்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இதுவரை அந்த நிகழ்ச்சிக்கு, நடிகர் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சூரி, ஜீவா, வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்தனர். 

இந்தவாரம் நடைபெறவிருக்கும்  நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொள்கிறார். நாம் ஒருவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் அந்த குடும்ப பெண்களின் படிப்பு செலவு, திருமண செலவு உட்பட எல்லா செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.