தல அஜித் முன் மரியாதையில்லாமல் ரசிகர்கள் செய்த செயல்.. கோபத்தில் முறைத்துப்பார்த்த அஜித்..! வைரலாகும் வீடியோ..!!

தல அஜித் முன் மரியாதையில்லாமல் ரசிகர்கள் செய்த செயல்.. கோபத்தில் முறைத்துப்பார்த்த அஜித்..! வைரலாகும் வீடியோ..!!


Actor ajithkumar recent video viral

தமிழில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். சமீபத்தில்கூட இவரது வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. 

தற்போது அவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடிக்க களமிறங்கி இருக்கிறார். இந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்திருப்பதால் தனது லுக்கையே முழுமையாக மாற்றி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20 முதல் 25 கிலோ எடை வரை குறைத்திருக்கிறாராம்.

Actor ajithkumar

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருக்கும் நிலையில், இப்படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் செய்த செயல் அஜித்தை கடுப்பாக்கி இருக்கிறது.

துணிவு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்ததால், அஜித் பைக்ரேஸ் சென்றிருந்த நிலையில், அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலானது. தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் தொடங்கியிருப்பதால் படக்குழு ஆங்காங் சென்று இருக்கின்றனர். 

Actor ajithkumar

இப்படி ஒரு நிலையில் விமான நிலையத்தில் ரசிகர்கள் மரியாதை இல்லாமல் அஜித்துடன் புகைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக அஜித் ரசிகரை முறைத்து பார்த்துள்ளார். எனவே அங்கிருந்த ரசிகர் விரைந்து விலகி சென்றிருக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, ஆரம்பம் படத்தில் வந்த ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.