என் சிக்ஸ்பேக்கை பார்த்து முதலில் பாராட்டியது யார் தெரியுமா? நடிகர் சூரி பேட்டி...!

என் சிக்ஸ்பேக்கை பார்த்து முதலில் பாராட்டியது யார் தெரியுமா? நடிகர் சூரி பேட்டி...!


actor-ajith-wishes-actor-soori-for-six-pack

சீமராஜா படத்தில் நடிகர் சூரி கடும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக்கில் தோன்றினார். அவருடைய சிக்ஸ்பேக் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டார். சூரியின் சிக்ஸ்பேக் படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து திரைத்துறையினரும், ரசிகர்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர். 

இந்நிலையில் இயக்குநர் ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் , இந்துஜா, சாந்தினி ஆகியோர் நடித்துள்ள படம் பில்லா பாண்டி. இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித்தின் ரசிகராக நடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கருணாஸ், சீமான், விஸ்வாசம் பட தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர்.

இதனை அடுத்து நடிகர் சூரி பேசும்போது ‘நான் சிக்ஸ்பேக் வைத்த படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இயக்குனர் சிவா மூலம் என்னை தொடர்புகொண்டு பாராட்டியது அஜித் தான். அவரை என்றுமே மறக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.