அடேங்கப்பா.. இத்தனை கோடியா?? ஏ.கே 63 படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!Actor ajith salary for AK 63 movie

தமிழ் சினிமாவில் எத்தகைய சினிமா பின்னணியும் இல்லாமல் தனது தீராத முயற்சியால் முன்னேறி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .

சில வருடங்களாகவே அஜித் நடித்த படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை எதுவும் படைக்கவில்லை. இந்த நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதன் படபிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி அர்பைஜன் நாட்டில் நடைபெற்று வருகிறது.

Ajith

விடாமுயற்சியை தொடர்ந்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக்கும் இப்படத்திற்காக அஜித்திற்காக 175 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.