சினிமா

நடிகர் அப்பாஸின் அழகான மனைவியின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!

Summary:

Actor abbas wife and family photos

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அப்பாஸ். இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அப்பாஸ்.  இவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர்.

இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ள அப்பாஸ் தனது சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் இருந்து வந்தார்.

1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம்தான் இவரது சினிமா பயணத்தின் முதல் படி. முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டார். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடா என பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றார். 

இந்நிலையில் இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


Advertisement