திடீரென தமிழக முதல்வரை சந்தித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்! இதுதான் காரணமா? தீயாய் பரவும் புகைப்படம்!!

திடீரென தமிழக முதல்வரை சந்தித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்! இதுதான் காரணமா? தீயாய் பரவும் புகைப்படம்!!


action-king-arjun-meet-mk-stalin

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். இவர் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவான மேதாவி மற்றும் பிரண்ட்ஷிப் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் சிலரோ பொது நிவாரண நிதிக்கு நிவாரண தொகை அளிக்க அவரை சந்திக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். அப்பொழுது துர்கா ஸ்டாலின் அவர்களும்  உடன் இருந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

MK Stalin

இந்த நிலையில் அர்ஜுன் மரியாதை நிமித்தமாகவே தமிழக முதல்வரை சந்தித்தார் என தகவல்கள் வெளியானது. மேலும் இதற்கிடையில் நடிகர் அர்ஜுன் கோவில் ஒன்றை கட்டியிருப்பதாகவும், அந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு அழைப்பு விடுவிக்கவே முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது