விஜய்க்கு உதவி செய்த விஜயகாந்த்.. என்ன விஷயம் தெரியுமா.?Acter vijayakandh helping to vijay

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இளைய தளபதி எனும் செல்ல பெயரையும் பெற்றிருக்கிறார் விஜய்.

vijay

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இது போன்ற நிலையில், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விஜய்க்கு ஆரம்ப காலகட்டத்தில் உதவியதாக செய்தி ஒன்று சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஆரம்ப காலகட்டத்தில் இளைய தளபதி விஜய் சினிமாவில் காலுன்றி நிற்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.

vijay

இதனால் விஜயின் தந்தை, விஜயகாந்த்திடம் பேசி ஒரு படத்தில் விஜய்யுடன் நடிக்கும் படி கேட்டுக்கொண்டார். உடனே விஜயகாந்த் ஒத்துக் கொண்டு விஜய்யுடன் நடித்து அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இச்செய்தியை தற்போது இணையத்தில் பரவி வருகிறது.