சம்பளத்தை திடீரென உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிம்பு..

சம்பளத்தை திடீரென உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிம்பு..


Acter simbu raised his salary

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் தமிழில் பல  ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் சிலம்பரசன் எனும் பெயர் பெற்றிருக்கிறார். குழந்தையிலிருந்து சினிமாவில் நடித்து வரும் சிம்பு, தற்போது வரை தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

simbu

சில காலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டங்களை ஏற்படுத்தியதாக புகார் எழுப்பப்பட்டு பட வாய்ப்புகள் சிம்புவிற்கு வருவது குறைந்தது. இதனையடுத்து படத்தில் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்து வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. இதனை அடுத்து 'வெந்து தணிந்தது காடு'  போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தை படைத்தார்.

simbu

மேலும் சில படங்களில் கமிட்டாகி இருக்கும் சிம்பு சமீபத்தில் தனது சம்பளத்தை கோடியில் உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சில படங்கள் ஹிட்டானதும் சம்பளத்தை கோடியில் உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.