இர்பான் கானை தொடர்ந்து இன்று மேலும் ஒரு பிரபல நடிகர் மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த போன திரையுலகினர்..!



Acter rishi kapoor passed away

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் பெருங்குடலில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்று தனது 54 வயதில் மரணம் அடைந்தார். இவரது தாய் கடந்த சனிக்கிழமை உயிர் இழந்த நிலையில், தாய் இறந்து மூன்று நாட்களில் மகன் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இர்பானின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து, இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தநிலையில், இன்று மேலும் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் மரணமடைந்துள்ளார்.

death

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர்(68) வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  ரிஷிகபூர் இன்று உயிர் இழந்தார். இரண்டு நாட்களில் இரண்டு பிரபலங்களை பரிகொடுத்துவிட்டு பாலிவுட் வட்டாரம் பெரும் சோகத்தில் உள்ளது.