ராஜ்குமார், சிவாஜி, கமல், ரஜினி, ஜெமினி உட்பட பலருடன் நடித்த, பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்..!
இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி! வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு!
இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி! வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் இவருடன் காஜல் அகர்வால் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக கிரேன்கள் மூலம் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020
முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.
இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.