கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் நேர்ந்த திடீர் விபத்து.! நடிகர் சூர்யாவுக்கு என்னாச்சு?? ஷாக் தகவல்!!

கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் நேர்ந்த திடீர் விபத்து.! நடிகர் சூர்யாவுக்கு என்னாச்சு?? ஷாக் தகவல்!!



Accident happened in kanguva move shooting spot

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி மற்றும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Kanguva

அங்கு  சண்டைக் காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தபோது ,10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதாகவும், அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு பெருமளவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும், இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் சூர்யா சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.