மாமியார் வீடு.. பிக்பாஸிலிருந்து வெளியேறிய அபிஷேக் வெளியிட்ட வீடியோ! என்னவெல்லாம் பேசியுள்ளார் பார்த்தீர்களா!!

மாமியார் வீடு.. பிக்பாஸிலிருந்து வெளியேறிய அபிஷேக் வெளியிட்ட வீடியோ! என்னவெல்லாம் பேசியுள்ளார் பார்த்தீர்களா!!


abishek-video-after-elimination-from-bigboss

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். துவக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் திரைப்பட விமர்சகரான அபிஷேக் ராஜா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தன் மீது கவனத்தை கொண்டுவர பல வேலைகள் செய்து பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரமே எலிமினேட் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து  நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்க மீண்டும் அபிஷேக் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனாலும் கடந்த வாரம் மறுபடியும் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் முதன்முதலாக லைவ்வில் பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் இரண்டாவது முறையாக மாமியார் வீட்டுக்கு சாரி பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகு இப்போதுதான் பேசுகிறேன் என பேசத் தொடங்கியுள்ளார். பின்னர் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே அவர் தொடர்ந்து பேசிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.